Donald Trump vs Joe Biden : மூன்றாவது விவாதம் நடைபெறும் தேதி அறிவிப்பு
டிரம்ப் மற்றும் பைடன் இடையே மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே முதல் விவாதம் நடைபெற்றது.ஆனால் அதிபர் டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே முதல் விவாதம் நடைபெற்ற பின்னர் அதிபர் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, காணொளி மூலமாக 2-வது விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்காக காணொளி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை என டிரம்ப் அறிவித்தார். ஆகவே இரண்டாவது விவாதம் கடந்த 15- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி டென்னெஸ்சில் (Tennessee) உள்ள பெல்மொண்ட் பல்கலைக்கழகத்தில் (Belmont University) நடைபெறுகிறது.இந்த விவாதத்தை என்.பி.சி செய்தியாளர் கிறிஸ்டீன் வெல்கெர் (Kristen Welker) தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்கு 90 நிமிடங்கள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.