அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துளளார்.
அமெரிக்காவில் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.துணை அதிபராக அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.அவர் பேசுகையில், நான் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன்.இது எனக்கு அதிக அழுத்தத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…