தோற்றால் வெளியேறுவேன்… குற்றகுடும்பம்..ஜோபைடன்- தகிக்கும் தேர்தல் அனல்
அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கொரோனா தொற்றுக்கு ஆளான அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது அதிலிருந்து படிப்படியாக குணமடைந்து கொண்டு வருகிறார் மேலும் நேரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே விஸ்கான்சின் மாகாணத்தில் உரையாற்றிய ட்ரம்ன் தனக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையை போல் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் தான் டிரம்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போல் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்காது என்று இதற்கு முன் ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டிரம்ப் அறிவிப்பு என்று கூறப்படுகிறது.
ஜோ பிடன் என்ற பின்னடைவுக்கும் டிரம்ப் என்கிற முன்னேற்றத்திற்கும் நடக்கும் பலப்பரிட்சைதான் இந்த தேர்தல் என்று கூறிய ட்ரம்ப் தொடர்ந்து மிச்சிகன் மாகாணத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஜோ பிடேன் ஆட்சிக்கு வந்தால் தடுப்பு மருந்து வரத்தை தாமதப்படுத்தி கொரோனாவிலிருந்து மக்கள் குணமாகும் சதவீதத்தை குறைப்பார் என்று குற்றம்சாட்டினார்.
விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறிய ட்ரம்ப் ஜோ பிடேனின் குடும்பமே ஓர் குற்றப்பின்னணி கொண்ட குடும்பம் என்று டிரம்ப் கடுமையாக சாடினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப் தான் தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.