#US Election : வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்! ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம்!
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கும் எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக, ட்ரம்ப் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு, ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை, ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் பாஸ், ட்ரம்பின் புகாருக்கு ஆதாரமில்லை என வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.