அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் டிரம்ப், பைடன் நேருக்கு நேர் விவாதம்!

அமெரிக்காவில்அதிபருக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், முதன்முறையாக அதிபர் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், முதன்முறையாக அதிபர் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.
அதன்படி, டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நடத்தும் முதல் நேருக்கு நேர் விவாதம், ஹிகோ மாகாணத்தில் க்ளைவ் லாண்டில் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த நடக்கவுள்ள விவாதங்கள், அக்.15-ம் தேதி, ப்ளோரிடாவிலும், அக்.22-ம் தேதி டென்னிஸில் நடைபெறவுள்ளது. மேலும் துணை அதிபருக்கான விவாதம், அக். 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025