தொடரும் கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ-அமெரிக்க அதிபர் டிரம்ப் மோதல்!கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ,ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில் அதைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் அவர், இரும்பு மற்றும் அலுமினியத்தின் மீது விதித்துள்ள கூடுதல் வரியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். மேலும் இது அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளை அவமதிப்பதாக உள்ளது. என்று கூறினார்.
ட்ரூடோவின் கருத்திற்கு ஜி7 மாநாட்டை முடித்துவிட்டு சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்,கண்டனம் தெரிவித்து டீவீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியது, மாநாட்டில் நான் பங்கேற்றபோது என்னுடன் இணக்கமான முறையிலேயே நடந்துகொண்டார். ஆனால் நான் சென்றுவிட்ட பின் ஏன் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை. இது ஒரு நேர்மையற்ற செயல் எனக் கண்டித்துள்ளார். மேலும் ஜி7 மாநாட்டுத் தீர்மானங்களை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும், கனடா பால் பொருட்களின் மீது விதித்துள்ள 270 சதவீத வரிக்கு பதிலடியாகவே அமெரிக்காவின் நடவடிக்கை அமைந்துள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.