அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86 லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன் சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார்.
பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது.
அந்த பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது என வங்கி நிர்வாகம் கூறி பணத்தை வில்லியம்சனிடம் திருப்பி கேட்டது. ஆனால் அதற்க்குள் தனது கணவர் ராபர்ட் வில்லியம்சன் உடன் சேர்ந்து கார், சொகுசு வாழக்கைக்கான பொருட்கள், நண்பர்களுடன் பார்ட்டி என பணத்தை காலி செய்தனர்.
இதனால் வங்கியிடம் திருப்பி செலுத்த பணமின்றி வங்கியுடனான இணைப்பை துண்டித்து கொண்டனர். இதனால் வங்கி நிர்வாகம் போலீஸ் மூலம், புகாரளித்து, அவர்களை பிடித்தனர் . தற்போது போலீசார் இவர்கள் மீது 3 பிரிவுகளில்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…