அமெரிக்காவில் 4-வது வாரத்தில் அதிகரித்த இறப்பு , நோய் தொற்று 5% குறைந்தது.!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 4,862,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 158,931 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில், ஆகஸ்ட் 2- ம் தேதி வரை அதற்கு முன் 7 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,500 ஐ கடந்துள்ளது. ஆனால் அதே வேளையில் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வில் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரத்தின் இறப்பு எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 36% அதிகமாக இருந்தது, இருப்பினும் புதிய நோய் தொற்று குறைந்துள்ளது. ஆனால், இது சில வாரங்களுக்கு பிறகு உயரக்கூடும் என்று தெரிவிக்கிறது.