போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கு விதமாக செயல்படுவதாக பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களிடம் அமெரிக்க காங்கிரஸ் 4 மணிநேரமாக விசாரணை நடத்தியது.
பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள், தங்களின் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அமெரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள், அந்தந்த நிறுவன நிர்வாகிகளிடம் காணொளி மூலம் விசாரணை நடத்தினார்கள்.
அப்பொழுது அவர்களிடம் காங்கிரஸ் கமிட்டி, 90% இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவில் பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகிறதாகவும், தங்களின் வளர்ச்சிக்காகக் பிற நிறுவனங்களை முடக்கியும், மக்களின் தேர்வு செய்யும் உரிமையை இவர்கள் பறிக்கிறதாகவும் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்தது.
காங்கிரஸ் கூறியதற்கு மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, டிக் கூக், ஜெப் பெஸோஸ் மறுப்பு தெரிவித்தனர். மேலும், அந்தந்த நிறுவனங்களை பற்றி பல குற்றச்சாட்டுகளை அமெரிக்க காங்கிரஸ் முன்வைத்தது.
அதன்படி, பேஸ்புக் நிறுவனம், மக்களிடையே பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை பரவுவதாக ஏற்கனவே குற்றச்சாற்றுகள் வந்ததை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், அதனை தடுக்கவில்லை என தெரிவித்தது. மேலும், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் நிறுவனங்களை பேஸ்புக் வாங்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.
அதற்க்கு பதிலளித்த மார்க் ஜுக்கர்பெர்க், அமெரிக்காவில் நாங்கள் பெரிய நிறுவனம் இல்லை என தெரிவித்த அவர், தற்போது வேகமாக வளரும் ஒரே நிறுவனம், டிக்டாக்தான் என்றார். மேலும், இன்ஸ்டாகிராமை வாங்கியதன் மூலமாக, உலகின் பல சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர வைக்கிறோம் என கூறினார்.
கூகுள் நிறுவனம், தனது சர்ச்சிங் முறையில் நிறைய குறைகளை கொண்டுள்ளதாகவும், மக்களின் பல தகவல்களை திருடுகிறது. மேலும், ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும், நடுநிலையுடன் செயல்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்க்கு சுந்தர் பிச்சை, கூகுள் சர்ச் எஞ்சின் யாருக்கும் எதிராக செயல்படவில்லை எனவும், இது AI (Artificial Intelligence) மூலம் செயல்படுகிறது என தெரிவித்தார். மேலும் கூகுள் நிறுவனம், எல்லோரும் சமமான வாய்ப்பை வழங்குவதாகவும், போட்டி இருப்பது சரிதானே என கூறிய அவர், போட்டியாளர்களை ஒருபோதும் எதிர்த்ததே இல்லை என தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம், எந்த செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும், மக்கள் பயன்படுத்த கூடாது எனதீர்மானிக்கிறதாகவும், அது முழுக்க முழுக்க தவறான விஷயம் என குற்றம் சாட்டியது. அதற்க்கு டிம் கூக், ஆப்பிள் நிறுவனம், செயலிகள் எதையும் கட்டுப்படுத்தவில்லை என தெரிவித்தார்.
ஆப் ஸ்டோரில் 1.7 மில்லியன் செயலிகள் உள்ளதாகவும், அவற்றுள் ஆப்பிள் செயலிகள் மொத்தமாகவே 60 செயலிகள் தான் உள்ளது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எங்களுக்கு நிறைய போட்டிகள் உள்ளதாகவும், போட்டியாளர்களை நாங்கள் சூழ்ச்சி செய்து விழ்த்துவதில்லை என தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம், தங்களின் போட்டி நிறுவனங்களை வளரவிடலை என குற்றம் சாற்றிய அமெரிக்க காங்கிரஸ், டயப்பர்ஸ் நிறுவனத்தை அமேசான் அழித்ததாக குற்றம் சாட்டியது. இதற்க்கு ஜெப் பெஸோஸ், அமேசான் நிறுவனம் சிறிய நிறுவனங்களை அளிப்பதில்லை, அளிப்பதும் கிடையாது என தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வழங்குகிறோம் என தெரிவித்த அவர், நானே சிறிய நிறுவனமாக இருந்ததுதான் அமேசானை வளர்த்துக்கொண்டு வந்தேன். மக்களுக்கு தேவையானதை கொடுப்பதால், எண்களின் போட்டி நிறுவனங்களை விட மக்கள் எங்களுக்கு அதிகளவில் ஆதரவை தருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…