ஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை.!
அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் சர்வதேச விமானங்களை இயக்க தடை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு கண்டுபிடித்தது. கடந்த மாதம் பாகிஸ்தான் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் என பாகிஸ்தான் விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு 6 மாதம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானில் விமானிகளின் அலட்சியத்தால் நடைபெற்ற விமானம் விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.