அமெரிக்காவின் அடுத்த அதிரடி….ஈரானை மிரட்டும் உலகின் நாட்டாமை….. படைகளை கண்டு பணியுமா? ஈரான்… ……

Default Image

வளைகுடா நாடான ஈரான், கடந்த  2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்டது.இந்த  வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்  ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதுத.இந்த ஒப்பந்தம் அமெரிக்க  முன்னால் ஜனாதிபதி  ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை.

Image result for us abraham lincoln

இந்த ஒப்பந்தத்தில்  அமெரிக்காவின்  நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது எண்ணம். இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.இந்த செய்தி  அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே புகைச்சலை  ஏற்படுத்தியது.மேலும் அமெரிக்கா, ஈரான் நாட்டு படையை கருப்பு பட்டியலில் சேர்த்தது.மேலும்  அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்க்கு கொண்டுசென்றது.

Image result for b 52 bomber

இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு மிகக் கடுமையான சரிவை சந்தித்தது.மேலும் ஈரான் ,ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என தன் பங்கிற்க்கு மிரட்டல் விடுத்து வருகிறது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிகப்பெரும் தடையாக  அமைந்து விடும். இந்த நிலையில் ஈரானின் செயலால்  அமெரிக்கா தன் பங்கிற்க்கு போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் அந்தப்பகுதிக்கு  நகர்த்துகிறது. பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. முன்னதாக  இந்தப் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தொகுதி  நிலைகொண்டுள்ளது.அதில் மேலும் வலு சேர்க்கும் வகையில் யு.எஸ்.எஸ். ஆர்லிங்டன் விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்பியுள்ளது.

Related image

ஏற்க்கனவே  கத்தார் தளத்துக்கு அமெரிக்காவின் பி-52 ரக அதி நவீன போர் விமானங்கள் போய்ச் சேர்ந்து விட்டன.இதற்க்கான காரணமாக ,ஈரான் படை மூலம்  மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதை ஈரான் முற்றிலுமாக நிராகரித்து உள்ளது. இந்த அமெரிக்காவின் செயலை ஈரான்  முட்டாள்தனமான செயல் என  விமர்சித்துள்ளது.

Image result for us army

ஈரானின் அண்டை நாடான  ஈராக்கில் மட்டும் அமெரிக்காவின் 5 ஆயிரத்து 200 படை வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் அனுப்பி வைப்பது, அந்த நாடு ஈரானுடன் போர் தொடுப்பதற்கான முன் ஏற்பாடா என்ற கேள்வி சர்வதேச அரசில் எழுந்துள்ளது.இதன் மூலம்  சர்வதேச அரங்கில் இந்த விவகாரம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்