வீட்டிலே 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா
வீட்டு பயன்பாட்டிற்காக 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை கண்டறியும் கருவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நேற்று வீட்டு பயன்பாட்டிற்கான கொரோனா சுய பரிசோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறியது, இது 30 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லூசிரா ஹெல்த் நிறுவனம் தயாரித்த இந்த சோதனை கருவி14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. அதாவது, வீட்டு உபயோகத்திற்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், கொரோனாவை கண்டறியும் சோதனைகள் வீட்டிலேயே சேகரிப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது முழுக்க முழுக்க சுய நிர்வகிக்கவும், வீட்டிலேயே முடிவுகளை வழங்கவும் முடியும் என்றார்.
இந்த கிட் மருத்துவமனைகள் மற்றும் பாயிண்ட்-ஆஃப்-கேர் அமைப்புகளிலும் பயன்படுத்தப்படலாம். ஆனால், பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 14 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால் மாதிரிகள் ஒரு சுகாதார வழங்குநரால் சேகரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார கட்டுப்பாட்டாளர் கூறினார்.