சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது.கொரோனாவால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் 7,993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியது.இதனால் கொரோனா பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் நீடித்தார்.
இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்பை காரணமாக பாகிஸ்தான் திணறி வருகிறது.இதன் காரணமாக ஏற்றுமதி துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், காகிதம், சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவற்றிக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட பாகிஸ்தானுக்கு , அமெரிக்கா நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. 84 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.64 கோடியே 24 லட்சம்) கொடுப்பதாக அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…
சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…