ரோபோ நாய்களை சோதித்த அமெரிக்க விமானப்படை!
அமெரிக்க விமானப்படை ரோபோ நாய்களை சோதித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நெல்லிஸ் எனும் விமானப்படை தளத்தில் ரோபோ நாய்கள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையில் சுறுசுறுப்பான போர் வேலைவாய்ப்பு பயிற்சியின் போது இந்த ரோபோக்கள் எவ்வாறு உதவுகிறது என்று சோதிக்கப்பட்டு உள்ளது. அதில் விமானப்படை வீரர்களுக்கு விரோதமாக தாக்குதல் எழும்பும் பொழுது இந்த நாய்கள் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாய்கள் சுற்றி வரக்கூடிய பகுதிகளின் காட்சிகளை படமாக்கி தருவதுடன் இவை விமானப் படையினருக்கு பாதுகாவலர்களாக மற்றும் சுற்றியுள்ள வட்டாரங்களை விமானத்தில் அவர்களுக்கு நன்கு தெரியும் படி வைத்து இருக்கின்றன என்று அமெரிக்க விமான படை தகவல் தெரிவித்துள்ளது.