அமெரிக்காவில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,262 கொரோனா உயிரிழப்புகள்.!
அமெரிக்காவில் கடந்த புதனன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக 1,262 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு இதுவரையில் 49,96,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,62,017 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று வெளியான கொரோனா உயிரிழிப்புகளில் அன்று இறந்தவர்களுடன் சேர்ந்து ஏற்கனவே இறந்து விடுபட்டதாக 1,262 பேர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வாயிலாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.