உறியடி ஹீரோ விஜய் குமாரின் புதிய படம் தொடக்கம்..!
உறியடி படத்தின் நடிகரான விஜய் குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.
நடிகர் மற்றும் இயக்குனரான விஜய் குமார் உறியடி, உறியடி 2 என்ற இரண்டு படங்களை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
இப்படத்தை உறியடி மற்றும் உறியடி 2 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் அப்பாஸ் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆதித்யா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அர்ஷா அறிமுகமாகவுள்ளார்.
இந்த புதிய படத்தின் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சங்கரதாஸ், அவினாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று தொடங்கிய இப்படப்பிடிப்பு மூன்று மாதங்கள் நடைபெற உள்ளது.