UPSC 2020: காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதன் அதிகாரபூர்வா இணையதள பக்கத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5, 2021(மாலை 6 மணி). விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விபரங்கள்
- சிவில் இன்ஜினியரிங்: 147 காலியிடங்கள்
- மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்: 85 காலியிடங்கள்
- மின் பொறியியல்: 74 காலியிடங்கள்
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 41 காலியிடங்கள்