தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் உப்பெனா.இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அறிமுகமான முதல் படத்திலையே வசூலை அள்ளிக் குவித்து வரும் வைஷ்ணவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.ஆம் உப்பெனா வெளியாகிய முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்து திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த அளவிற்கு சாதனை படைத்து வரும் உப்பெனா படத்தினை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,அதிலும் தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சஞ்சய் தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது, சஞ்சய் இயக்குனர் ஆவதற்கான படிப்பையே படித்தார் என்றும் , எனவே அவர் ஹீரோவாக அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…