#shocking:UPI சேவைகள் திடீர் முடக்கம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Default Image

நாட்டின் சில்லறை பரிவர்த்தனைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் செயல்படுகிறது.மேலும்,நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும்,மொத்த UPI பரிவர்த்தனைகள் 540 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே,பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பின் போது,ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாகக் கூறினார்.

இந்நிலையில்,யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் செயலிழந்தன.இதனால்,நாடு முழுவதும் UPI அடிப்படையிலான கட்டணச் சேவை நேற்று பாதிக்கப்பட்டது.அதன்படி, பேடிஎம்,கூகுள் பே,போன் பே(Paytm,PhonePe Google Pay) போன்ற பயன்பாடுகளில் UPI கட்டணச் சேவை சிறுது நேரம் முடங்கியது.இதனால்,அதிகமான பயனர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர்.

மேலும்,இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் பயனர்கள் ட்வீட் செய்துள்ளனர். குறிப்பாக,பணம் செலுத்தும் சேவையைப் பயன்படுத்தும் போது பரிவர்த்தனை தோல்வியுற்றதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து விட்டதாகவும்,UPI சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக,இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி UPI சர்வர் செயலிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்