ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

Default Image

இசையமைப்பாளர் அனிருத் அடுத்தாக 7 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். 

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. இந்த பாடல் யூடியூபில் 280மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் 3 படத்தை திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.

பிறகு நடிகர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக இசையமைத்திருந்தார். அதைபோல், அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், ஆகிய படங்களுக்கு துல்லியமான இசையை கொடுத்தார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார், போன்ற படங்களில் இசையமைத்தார். இதன் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனைகள் படைத்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற  அணைத்து பாடல்களும் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் கிட்டத்தட்ட 7 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார் அதற்கான பட்டியல் இதோ.

  • டாக்டர்
  • விக்ரம்
  • பீஸ்ட்
  • காத்து வாக்குல இரண்டு காதல் 
  • தனுஷ் 44
  • டான்
  • இந்தியன் 2 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்