மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு அறிக்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இது தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல”மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு (Environmental Impact Assessment – EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலேயும் மட்டும் நமது மொழி கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வெளியிடப்பட்டு வேண்டாமா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் cows-19 எனும் அரக்கன் பிடியில் நாம் அனைவரும் சிக்கி மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்.
மேலும் அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அந்த கருத்திற்கு நடிகர் சூர்யா அவர்கள் தற்பொழுது ரீட்வீட் செய்து புதிய கருத்து ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து சூர்யா பதிவிட்ட பதிவில், “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நம் மௌனம் கலைப்போம்” என்று பதிவு செய்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…