ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா உயிரிழப்பு..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 820 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 19,630 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 820 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி 819 பேர் உயிரிழந்தது அதிகமான உயிரிழப்பாக அந்நாட்டில் பதிவானது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்ச உயிரிழப்பாக மாறியுள்ளது. தற்பொழுது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,24,540 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,79,243 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையில் 5,52,479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,661 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,92,818 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025