எச்சரிக்கை: திருமணமாகாத ஆண்கள் கொரோனாவுக்கு பலியாகும் வாய்ப்புகள் அதிகம்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருமணமாகாத,கல்வியறிவு இல்லாத, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் பிறந்த ஆண்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் அதிபர்கள் வரை பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக கொரோனாவால் அதிகளவில் வயதானவர்களே அதிகளவில் உயிரிழப்பதாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருமணமாகாத, குறைந்த வருவாய் கொண்ட, கல்வியறிவு இல்லாத, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் பிறந்த ஆண்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும், ஸ்வீடன் சுகாதாரத்துறை அமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோரின் புள்ளி விபரங்களை வெளியிட்டது. அதில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கலே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஆங்கில ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியானது. அந்த செய்தியில், மற்ற நாடுகளை பிறந்து ஸ்வீடன் வந்த மக்களை விட, ஸ்வீடனில் பிறந்த மக்கள், கொரோனாவால் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, வருவாயும், கல்வியறிவும் கூட கொரோனா உயிரிழப்பில் பாதிப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஒரு ஆண், குறைந்த வருவாய் கொண்ட, கல்வியறிவு இல்லாத, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் பிறந்த ஆண்கள் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகமாகும். கொரோனா மட்டுமின்றி, இதர நோய்களுக்கும் இதே நிலைதான் உயிரிழப்பு விகிதம் பொருந்துகிறது என ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸ்வென் டிரஃபல் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது.
பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் உயிரிழக்கும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, திருமணமான ஆண்களை விட திருமணமாகாத ஆண்கொரோனாவுக்கு உயிரிழக்கும் ஆபத்து அதிகம் எனவும், இதற்கு காரணம், திருமணமாகாதவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்த கவனமே ஆகுமென தெரிவித்துள்ளனர்.