மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்.! 19 சிரியா வீரர்கள் பலி.!
சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 9 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. பின்னர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி அங்கு கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி சிரியா படையினர் நடத்திய தாக்குதலில் 34 துருக்கி வீரர்கள் பலியானார்கள். இதனால் சிரியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணிய துருக்கி, 3 நாட்களுக்கு முன்பு இட்லிப் மாகாணத்தில் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சிரியா அதிபர் ஆதரவு படையை சேர்ந்த 26 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் இத்லிப் மாகாணத்தில் துருக்கி மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாகவும் அதில், சிரியா வீரர்கள் 19 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.