கலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.!
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில், தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.எனவே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். தீயை கட்டுபடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு வீரர்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.
அப்பகுதியில் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ பிற இடங்களில் வேகமாக பரவுவதாகவும், தீயை விட வேகமாக வீசும் காற்றை கட்டுப்படுத்துவது தான் பெரும் சவாலாக உள்ளதாக தீயணைப்பு வீரர் கூறுகிறார்.
வேகமாக வீசும் காற்றால் காட்டுத்தீ புதிதாக பல்வேறு வனப்பகுதிகளில் பரவுவதாகவும், அதனை கட்டுபடுத்த வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நீரை ஊற்றி தீயை அணைக்கு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
More than 100,000 people are under mandatory evacuation orders from the wildfires in Southern #California, where two fires are burning out of control. https://t.co/8zC7GM7XQk pic.twitter.com/w0PUeJxpzg
— Atlantide (@Atlantide4world) October 27, 2020