மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.
அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. மலையாள திரையுலகை பொறுத்தவரையில், நடிகர் மோகன்லால் மம்முட்டி ஆகியோருக்கு தான் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தொழிலதிபரான லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசப் அலி செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த கோல்டன் விசாவை, அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை தலைவர் முகமது அலி அல் ஷோறாப் அல் ஹம்மாதி-யிடம் இருந்து நடிகர் மோகன்லால் மட்டும் மற்றும் மம்முட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் மோகன்லால் கூறுகையில், இதற்காக முழு முயற்சி எடுத்த யூசப் அலிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளாவில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அதனுடன் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் மம்முட்டி கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் அரசு வழங்கிய கோல்டன் விசாவை சந்தோசமாக பெற்றுக்கொண்டோம். இது கேரள மக்கள் எங்களுக்கு அளித்த மிகப் பெரிய பரிசாக கருதுகிறோம். நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால், எங்களால் இதை அடைந்திருக்க முடியாது. இதை எங்களுக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…