யுனிலிவர் நிறுவனம் தனது ‘Fair & Lovely’யின் பெயரை ‘Glow & Lovely’ என்று மாற்றியுள்ளது.!
ஃபேர் & லவ்லி-யின் பெயரை “க்ளோ & லவ்லி” என்று மாற்றியுள்ளது.
யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற முகத்தில் பயன்படுத்தும் கிரீமை 1975-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை இந்த அழகு சாதன பொருட்களில் இருந்து நீக்க யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்தது.
இது குறித்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் கூறுகையில், அழகு என்பதில் அனைத்தையும் உள்ளடக்கியதாக தங்களது பார்வையை மாற்றுகிறது. இதுவரை, ஃபேர், வொய்ட், லைட் என்ற வார்த்தைகள் தான் அழகு என்று அடையாளப்படுத்தப்பட்டது தவறு என்று நாங்கள் நினைக்கிறோம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு மாதங்களாக அழகு சாதன பொருட்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெள்ளை, நிறம் மாற்றம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்ய மாட்டோம் என கூறி வந்தனர் .
அந்த வகையில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தனது ஃபேர் & லவ்லி-யின் பெயரை “க்ளோ & லவ்லி” என்று மாற்றியுள்ளது. ஆனால் இதற்கும் சில குறைகளை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இணையவாசிகள். அதில் பெயரின் மாற்றம் நுகர்வோரின் வாயில் ஒரு மோசமான சுவையை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.
Which advertising agency (or smart bloke at HUL) created Glow & Lovely? Send them a copy of Wren & Martin after sacking either or both! The brand name itself is incorrect grammar. @Unilever
— SUHEL SETH (@Suhelseth) July 3, 2020