தெற்காசியாவில் 8,00,000 குழந்தைகள் இறக்கக்கூடும் – யுனிசெஃப் எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. பல நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றது. உலகம் முழுவதும் 9,714,809 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491,856 பேர் உள்ளது.
இந்த வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , யுனிசெஃப், கொரோனா வைரஸ் பாதிப்பால் தெற்காசியாவில் 120 மில்லியன் குழந்தைகள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் அபாயம் உள்ளது என கூறியுள்ளது.
பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகின்றது. கொரோனாவால் குழந்தைகள் குறைவாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஊரடங்கு காரணமாக ஏற்படும் பொருளாதாரம் மற்றும் பிற சமூகப் பிரச்னைகள் காரணமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என யுனிசெஃப் கூறியுள்ளது.
600 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். 240 மில்லியன் குழந்தைகள் வறுமையான நிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நல்ல கல்வி, ஆரோக்கியம், போன்ற காரணங்களால் மேலும் 120 மில்லியன் குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஊட்டச்சத்து, தடுப்பூசி மற்றும் பிற சுகாதார சேவைகள் போன்றவை பெறமுடியாத சூழல் அதிகரிக்கக் கூடும். இதனால், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதிக உயிரிழப்பு ஏற்படும்.
அதிலும், 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 8,00,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என யுனிசெஃப் தெரிவிக்கின்றன. இந்த இறப்புகளில் அதிகமாக இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நடைபெறும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025