உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள்.. யுனிசெஃப் எச்சரிக்கை!
உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடும் நிலைமை ஏற்படும் என “யுனிசெஃப்” மற்றும் “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து “யுனிசெஃப்” மற்றும் “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வின் முடிவில் அந்த அமைப்புகள் கூறியதாவது, கொரோனா தோற்றால் உலகளவில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சார்ந்துள்ளது.
இதனால் 2020ம் ஆண்டு இறுதியில் மேலும் 8.6 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளது. இது வழக்கத்தைவிட 15 சதவீத அதிகமாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து குடும்பங்கள் உடனடியாக பாதுகாக்காமல் இருந்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தேசிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 67.2 கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்தது.