21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை.! மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரிக்கை.!

Default Image
  • அமெரிக்காவில் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், உபயோகப்படுத்துவதும், சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
  • இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமாக விதிக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் செல்போன் இல்லையென்றால் பைத்தியம் பிடித்தது போல் காணப்படுவார்கள். சிறு குழந்தைகள் கூட செல்போன் இருந்தால் தான் சாப்பிடவே செய்கிறார்கள், இதனால் விளைவு அதிகரித்துக்கொண்டே போகிறது, இதை நிறுத்துவது சுலபமல்ல. இதன் பின் விளைவை யோசிக்காமல் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள், அதிலும் இளைஞர்கள் செல்போனில் தீவிரம்காட்டி வருவதால் பல தவறுகள் நாட்டில் நடந்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்க வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் அந்நாட்டு சபையில் இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், உபயோகப்படுத்துவதும், சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் எனவும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமாக விதிக்க வேண்டும் என்றும், அதில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்த மசோதா நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஒரு விழிப்புணர்வுக்காகவே தாம் சமர்ப்பித்ததாக செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்