சூரரைப்போற்று பாடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த “கையிலே ஆகாசம்” ரசிகர்களை கவர்ந்து பலரது ரிங்க் டோனாக மாறியது என்றே கூறலாம். இந்த பாடலை ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பாடியிருந்தார்.
மென்மையான இசையுடன் அழகான குரலில் வெளியான இந்த பாடலுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் வந்தது. இந்நிலையில், இந்த பாடலை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கேட்டுவிட்டு புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சில தருணங்கள், சில தருணங்கள், நாம் நினைத்ததை விட அதிகமான உணர்வைக் கொடுக்கும் தருணங்கள் உள்ளன. நேற்றிரவு அப்படி ஒரு தருணம் எனக்கு அமைந்தது. அந்த உணர்ச்சி எவ்வளவு மிகுதியாக இருந்ததென்றால் என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சூர்யா நடித்திருக்கும் படத்திலிருந்து ஒரு தமிழ்ப் பாடல். நமது மனதை உருக்கிவிடும். அதை நீங்கள் இந்தக் காணொலியில் பார்க்கலாம். ஆனால் நேற்று வேறொரு சூழலில் இதைப் பார்த்தேன். இன்னும் யதார்த்தமான ஒரு சூழலில்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்வு பந்தத்தை இது தாங்கியிருக்கிறது. இதுதான் அந்தக் காணொலி என சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற “கையிலே ஆகாசம்” பாடலை பதிவிட்டு “இந்தப் பாடல் மிக அழகாக, ஆழமாக, மென்மையாக, மனதைத் தொடுகிறது. இதைப் பற்றிக் குறிப்பிடும்போதே உணர்ச்சிகளைக் கிளறுகிறது. நான் இப்போது விடைபெறுகிறேன். ஏனென்றால் இன்னும் எழுத வேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் கண்ணீரை வரவழைக்கிறது. கண்ணீரைப் பகிர்ந்து கொள்வதும் ஒன்றாக இருக்கும் ஒரு உணர்வைத் தரும். புன்னகையும்தான். உங்கள் வாழ்வில் அதிக புன்னகையும், குறைவான கண்ணீரும் இருக்கட்டும்” என புகழ்ந்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…