விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முடியவில்லை! நாசா!
கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவிற்கு அனுப்ப பட்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் நிலவின் தென்துருவில் இறக்க படுவதாக இருந்தது.
ஆனால் சந்திராயன் விண்கலம் 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது.இந்த லேண்டருக்கு வெறும் 14 நாட்கள் தான் ஆயுட்காலம் ஆகும். இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளாலும் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில் இந்த விஷயத்தில் அமெரிக்காவின் சவிண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா இஸ்ரோவிற்கு உதவ முன்வந்தது. இனிநிலையில் இந்த விஷயத்தில் நாசாவாலும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க இயலவில்லை என்று முன்பு பல தகவல்கள் வெளியானது.
லேண்டரை தரையிறக்குவதற்காக நாசா எடுத்த முயற்சியும் தற்போது பின்னடைவை சந்தித்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் லேண்டரை தரையிறக்குவதற்காக நிர்ணயிக்கபட்டுடிருந்த இலக்கில் நாசாவின் செயற்கைகோள் புகைப்படம் எடுத்தாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்று நாசா கூறியுள்ளது.