சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல்.
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், இவருக்கு மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், அவர் காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பழங்குடியின போராளி ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. நீண்ட கால விசாரணைக் காவலில் அடைக்கப்பட்ட ஸ்டான் சுவாமி மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மேலும், உரிய சட்ட அடிப்படை இன்றி சிறையில் உள்ள கைதிகளை அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேரை விடுவிக்க இந்திய அரசிடம் ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…