கொரோனா வைரஸ் பரவலுக்கு ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து முதலில் பரவினாலும் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.கொரோனா பரவிய ஆரம்ப காலத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.குறிப்பாக,கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.கொரோனா குறித்து விசாரணை நடத்தப்படும் வேண்டும் அறிவித்தார்.அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
உண்மைக்கு புறம்பான தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதாக சீனா தெரிவித்தது. ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் சீனாவில் கொரோனா குறித்து வெளிப்படை தன்மையான தகவல்கள் எதுவும் சரியாக வரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தது. அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற ஆதாரம் தந்தால் வரவேற்பதாக கூறியது. ஆனால் இதுவரை ஆதாரம் எதையும் அமெரிக்கா தரவில்லை என்று தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனா குறித்து பேசியுள்ளார். ஐ.நா பொதுச் சபையில் டிரம்ப் பேசுகையில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் ஒரு பெரிய உலகளாவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியான சீனா வைரஸுக்கு எதிராக நாங்கள் கடுமையான போரை நடத்தியுள்ளோம். உலகம் முழுவதும் பரவ அனுமதித்ததற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலுக்கு ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…