ஐ.நாவின் ஈரான் மீதான 15 ஆண்டு கால ஆயுதத் தடையானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பு என சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது உத்தரவிட்டது.
ஐ.நாவின் இந்த தடையால் கடும் நெருக்கடிக்கு தள்ளபட்ட ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தினை கொடுத்தது. இதனால் அவ்வற்றின் மீதான் பொருளாதாரத் தடையை மட்டும் ஐநா விலக்கியது.
ஆனால் ஈரான் மீது போடப்பட்ட ஆயுதத் தடை உத்தரவு அக்., 18ந்தேதி 2020 வரை தொடரும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா அறிவித்தது.அந்த தடையானது 15 ஆண்டு கழித்து நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனான உறவில் இருந்து வெளியேறிய அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான பொருளாதார தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என்று ஐநா.வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் வல்லரசுவின் வலியுறுத்தல்களும் மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வி அடையவே ஈரான் மீது விதிக்கப்பட்ட ஐநாவின் தடைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவிற்கு வந்தது.
மேலும் ஈரான் மீது ஏதேனும் புதிய தடை நீட்டிப்பு பற்றிய எந்த அறிவிப்பையும் ஐநா இதுவரை அறிவிக்கவும் இல்லை அது குறித்து வாய்திறக்கவும் இல்லை.ஈரான் மீதான தடை முடிவால் அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளதாக ஐ.நா வட்டாடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…