பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகினர். இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்.. 9 பேர் பலி.! விளக்கம் கேட்கும் ஈரான்.!
இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளின் எல்லைகளில் நடத்தும் இந்த தாக்குதல்கள் அடுத்த இரு நாட்டு போருக்கு வழிவகுத்து விடுமோ என்கிற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. அதனால் பிரதான உலக அரசியல் தலைவர்கள் இரு நாடுகளும் போர் பதற்ற நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் – ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இன்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்காவின் கருத்துக்களை தெரிவித்தார். சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பிலும் இரு நாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா செய்தி தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் , ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்தியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி பற்றிசெய்தியாளர்கள் கேட்கையில், மேத்யூ மில்லர், என்னிடம் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இல்லை. அரசாங்கம் கூறிய கருத்துக்களை மட்டுமே நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வியாழனன்று, பாகிஸ்தான் மற்றும் ஈரான் தாக்குதல்கள் குறித்து பேசுகையில், ஈரான் அரசு விரும்பத்தகாத செயல்களை செய்கிறது என்பதை காட்டுகிறது என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் – ஈரான் தாக்குதல் குறித்து ஐ.நாசபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வெளி தாக்குதல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். பதற்றம் மேலும் அதிகரிப்பதை தவிர்க்க இரு நாடுகளும் தங்களுக்குள் ராணுவ கட்டுப்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துளளார்.
சர்வதேச இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையேயான நல்உறவுகளின் கொள்கைகளுக்கு ஒத்துழைத்து ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அனைத்து விதமான பதற்றத்தையும் அமைதியான முறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…