தீர்ப்பிற்கு முன்பே கணித்த உமா! கையிற்றில் தொங்க தயார்-கரசேவைக்கு பெருமைப்படுகிறேன்!

Published by
kavitha

இன்று தீர்ப்பளிக்கிறது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாஐக மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்,உமா பாரதி என்று 48 பேர் மீது வழக்கு பதிவு செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர்.

இதனிடையே வழக்கை தினசரி நடத்தி இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்குமாறு கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி பாபர் மசூதி தொடர்பான வழக்கில் நீதிபதி எஸ்.கே யாதவ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.

இந்நிலையில்  இவர்கள் அனைவரும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில்  முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி 26.9.2020 அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ‘’பாபர் மசூதி வழக்கில் நான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் அதை ஏற்று தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், எக்காரணத்தைக்கொண்டும் ஜாமீன் கேட்க மாட்டேன். வரப்போகும் தீர்ப்பை அடிப்படையாக வைத்துதான் எனக்கு பாஜகவில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அதனால் என்ன தீர்ப்பு வரும் என்று எனக்கு தெரியும். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. அயோத்தி கரசேவை இயக்கத்தில் பங்கு பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்’’என்று அக்கடித்தில் கூறியிருக்கிறார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

4 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

5 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

5 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

5 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

6 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

6 hours ago