தீர்ப்பிற்கு முன்பே கணித்த உமா! கையிற்றில் தொங்க தயார்-கரசேவைக்கு பெருமைப்படுகிறேன்!

இன்று தீர்ப்பளிக்கிறது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாஐக மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்,உமா பாரதி என்று 48 பேர் மீது வழக்கு பதிவு செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே வழக்கை தினசரி நடத்தி இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்குமாறு கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி பாபர் மசூதி தொடர்பான வழக்கில் நீதிபதி எஸ்.கே யாதவ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி 26.9.2020 அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ‘’பாபர் மசூதி வழக்கில் நான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் அதை ஏற்று தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், எக்காரணத்தைக்கொண்டும் ஜாமீன் கேட்க மாட்டேன். வரப்போகும் தீர்ப்பை அடிப்படையாக வைத்துதான் எனக்கு பாஜகவில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அதனால் என்ன தீர்ப்பு வரும் என்று எனக்கு தெரியும். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. அயோத்தி கரசேவை இயக்கத்தில் பங்கு பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்’’என்று அக்கடித்தில் கூறியிருக்கிறார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025