உக்ரைன் விமானமானது ரஷ்ய ரக ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது.!? என அமெரிக்கா குற்றச்சாட்டு .!

Published by
murugan
  • விமானத்தில் இருந்த 2 கருப்புப்பெட்டிகளை யாரிடமும் கொடுக்கமுடியாது என ஈரான் கூறியது.
  • அந்த விமானத்தை இரண்டு SA15  ரஷ்ய ரக ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது .

நேற்று முன்தினம் அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது.அதில் பயணம் செய்த பயணிகள் , விமான ஊழியர்கள்  என அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்த 2 கருப்புப்பெட்டிகளை யாரிடமும் கொடுக்கமுடியாது என ஈரான் கூறியது.

Image result for iranImage result for iran

இந்நிலையில் அமெரிக்க தரப்பில் இருந்து ஈரான் படையினர் தவறுதலாக தாக்கி இருக்கலாம் என கூறியுள்ளனர். செயற்கைக்கோள், ரேடார் கருவிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ததில் இரண்டு SA15  ரஷ்ய ரக ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது .

கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்ட்டின் பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தை ஈரான் ஏவுகணைகளை தாக்கியதாக கூறியுள்ளனர்.மேலும் எந்த வித உள்நோக்கத்துடன் ஈரான் மீது குற்றம் சாட்டவில்லை அவர் கூறினார்.

Image result for iranImage result for iran

பிரிட்டன் தரப்பிலிருந்து இதே கருத்து வெளியாகி வருகிறது. விபத்து குறித்து உக்ரேன் அதிபரிடம் தொலைபேசி வாயிலாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரங்கல் தெரிவித்தார். விபத்து நடந்த சூழலும், அதற்கான காரணம் இன்னமும் தெளிவாக  தெரியவில்லை என்பதால் ஐ.நா தலையிட்டு ஆய்வு  நடத்த வேண்டும் என  உக்ரைன்  வெளியுறவு துறை அமைச்சர் அமைச்சர் கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago
அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago
தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

8 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago