நாட்டை காக்க ஆயுதம் ஏந்திய உக்ரைன் நடிகர் காலமானார்..!

Published by
murugan

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணையலாம் என உக்ரைன் அதிபர்  தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பலர் ராணுவத்தில் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த வாரம் உக்ரைன் நடிகர் பாஷா லீ உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார்.

இந்நிலையில், தனது நாட்டை காப்பாற்றும் போது ரஷ்ய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் பாஷா லீ தனது உயிரை இழந்தார். லீ 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி-நகைச்சுவைத் திரைப்படமான செல்ஃபி பார்ட்டி மற்றும் விளையாட்டு அதிரடித் திரைப்படமான தி ஃபைட் ரூல்ஸ் ஆகிய திரைப்படம் மூலம்  புகழ் பெற்றார். நடிப்பைத் தவிர, பிரபலமான உக்ரேனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘டே அட் ஹோம்’ தொகுப்பாளராகவும் புகழ் பெற்றார்.

நடிப்புடன், டப்பிங், பாடல் மற்றும் இசையமைப்பிலும் பெயர் பெற்றார். கடந்த சனிக்கிழமை பஷா லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், கடந்த 48 மணிநேரமாக ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து நமது வீரர்கள் போராடியதை கண் முன்னே பார்க்க முடிந்தது. உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago