உக்ரைனின் போயிங் 737 விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகள் பலி .! ஈரான் தரையில் விழுந்து நொறுங்கியது.!

Default Image
  • தொழில்நுட்ப சிக்கல்களால் உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது
  • ஜெட் விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர்.

உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் 180 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் தொழில்நுட்ப சிக்கல்களால் விபத்துக்குள்ளானதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான விபத்து குறித்து அங்கு விசாரணை நடந்து வருகிறது .இந்த விபத்து இயந்திர கோளாறினால் தான் நடந்ததா என்று உறுதிப்பட தகவல் வெளியாகவில்லை என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம்  ட்வீட் செய்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் .அதன் பின்பு நடந்த காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் பேசிய  மூத்த அதிகாரி

ஊர்வலத்தை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. அப்போது பேசிய  மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த விமானம் விபத்து அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்