ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போரில் உக்ரைன் வெற்றி பெரும் – இங்கிலாந்து பிரதமர்..!
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைனுக்கிடையில் தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் வீடியோ இணைப்பு மூலமாக பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், உக்ரைன் நாட்டின் தலைநகராகிய கீபிங் விற்கு சிறந்த நேரம் இது. நிச்சயம் உக்ரைன் போரில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் சுதந்திரமாக இருக்கும் என பிரதமர் ஜெலன்ஸ்கியிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த காலகட்டம் உக்ரைனில் வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உங்கள் மற்ற நட்பு நாடுகளுடன் சேர்ந்து உங்களுக்கு ஆயுதங்கள், நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்.
உக்ரேனின் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு நாங்களும் உடன் இருப்போம் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாட்டிற்கு நிவாரணமாக 300 மில்லியன் பவுண்ட் ராணுவ உதவியை வழங்கியுள்ளார். இந்த நிவாரணத்தில் மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேசியுள்ள உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைன் மற்றும் இங்கிலாந்து சகோதர சகோதரிகளாக உள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.