ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும்- உக்ரைன் அதிபர்..!

Published by
murugan

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, ஐரோப்பா கூட்டமைப்பு சட்டங்களை மீறி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் குண்டு வீசி தாக்குவதாகவும், மக்களில் சிலருக்கு இந்த நாள் நல்ல நாளாக இல்லை. வேறு சிலருக்கு இந்த நாள் தான் வாழ்வின் கடைசி நாள். தாய்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருக்கும் உக்ரைன் குடிமக்களை பற்றி நான் பேசுகிறேன் என தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பா கூட்டமைப்பு  ஒற்றுமையுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் குண்டு வீச்சில் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். 5 நாட்களாக ரஷ்ய கூட்டமைப்பு குழு அளவிலான தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வருகிறது. சுதந்திரமாகவும் , சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்க்காக உயிரை தியாகம் செய்து வருவதாகவும், உக்ரைனியரான நாங்கள் யாரையும் வெற்றிகொள்வோம்.

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும்  சுதந்திர சதுக்கம் உக்ரைனில் கீவ் நகரில் அமைந்துள்ளது. இன்று காலையில் உக்ரைனின் சுதந்திர சதுக்கத்தின் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டதில் பலநூறு பேர் மாண்டு விட்டனர். சுதந்திரத்துக்கான போருக்கு, உக்ரைனியர்கள் பல நூறு உயிர்களை விலையாக கொடுத்துள்ளனர். எங்கள் மண்ணுக்கான , சுதந்திரத்துக்காக உக்ரைன் மக்கள் உயிர்களை தியாகம் செய்து கொண்டு வருகின்றனர்.

உக்ரைனின் அனைத்து நகரங்களும் யாரும் நுழைய முடியாதபடி தடைகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளன.  யாராலும் எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது. உக்ரைனியர்களான நாங்கள் பல மாணவர்கள், எங்கள் குழந்தைகள் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நேற்று ரஷ்ய இராணுவம் குண்டு வீசியதில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டனர். இராணுவ நிலைகளை தாக்கியதாக புதின் கூறுகிறார். எந்த இராணுவ தொழிற்சாலையில் குழந்தைகள் பணியாற்றுகின்றனர்? ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும்  என தெரிவித்தார்.

 

 

 

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

7 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

8 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

9 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

10 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

10 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

11 hours ago