ரஷ்யாவுடனான உறவை துண்டித்தது உக்ரைன்!
தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது.
உக்ரைன் மீது போர் தொடுக்க இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, வான்வெளி மற்றும் நேரடியான ராணுவ தாக்குதல் என இரண்டிலும் தற்போது ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. பல மணிநேரமாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள், 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள 2 நகரங்களையும் கைப்பற்றியதாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியர்கள் அறிவித்திருந்தன.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. பலவேறு கடுமையான தடைகளையும் ரஷ்யா மீது விதித்துள்ளது. ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் உதவுமாறும் ரஷ்யாவை தடுத்த நிறுத்த வலியுறுத்துமாறும் உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மெது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இந்திய பங்குச்சந்தைகள், தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு, ரஷ்யாவின் பண மதிப்பு குறைவு உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து அந்நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது உக்ரைன்.