தாக்குதல் வேகத்தை ரஷ்ய படைகள் குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு.
நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழலில்,ரஷ்யாவுடன் பேச்சு வாத்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்திருந்தது.
இந்நிலையில்,தாக்குதல் வேகத்தை ரஷ்ய படைகள் குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக…