உக்ரைன் – ரஷ்யா மோதல் – போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்!
உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு மத்தியில் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு இடையில் அடுத்த வாரம் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதாவது, மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை தூண்டியதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கான சர்வதேச பதிலைப் பற்றி விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மார்ச் 25-ஆம் தேதி போலந்துக்குச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்று, போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவுடன் உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்க உள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
முன்னதாக பெல்ஜியத்தில் NATO, G7 மற்றும் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் போலந்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.