வெளிநாட்டினர் வெளியேற உக்ரைன் அரசு மறுப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பதாக ரஷ்யா குற்றசாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தெளிவான போர் திட்டங்களை வகுத்து வருகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய கூட்டமைப்பு மீது நேரடியான பாதுகாப்பு அச்சறுத்தலை மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் உக்ரைன் ராணுவ குழுவினர் தற்போது வரை அமெரிக்காவின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கின்றனர், ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான ராக்கெட் என்ஜின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையத்தை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது ரஷ்யா அறிவித்துள்ளது.