#BREAKING: சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையீடு – அதிபர் செலன்ஸ்கி ட்விட்..!

Default Image

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை நிறுத்த உடனடியாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறி உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் மனு .

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து, இன்று நான்காவது நாட்களாக ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில்,  உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மக்கள் மீதான இன படுகொலையே காரணம் என கூறி ரஷ்யா நியாப்படுத்த முயற்சி செய்கிறது. உக்ரைனில்  இனபடுகொலை நடப்பதாக போலியாக குற்றம்சாட்டி போருக்கு வழிவகுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கவும்,  உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றும்

போரை உடனடியா நிறுத்த உத்தரவிட வேண்டும் என கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என அதிபர் செலன்ஸ்கி ட்விட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack