அரசு குடும்ப கடமையிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் இளவரசர்.! மக்கள் வரிப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டுவார்கள்.
  • பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இனி இந்த பட்டங்களை குறிப்பிட்டு  அழைக்கப்பட மாட்டார்கள் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு அழைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இனி இந்த பட்டங்களை குறிப்பிட்டு  அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக இனி பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பல மாதங்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஹாரி, மேகன் மற்றும் பேரக்குழந்தைக்கு சிறப்பான வகையில் முழு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாரி அவரது மனைவி மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் என் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

8 minutes ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

1 hour ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

2 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

3 hours ago

திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது! மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…

3 hours ago

உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…

4 hours ago