இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்!
உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் நோயானது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பாதித்துள்ளது.
அவர் தன்னைத்தானே 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், நோய் தொற்றின் தீவிரம் குறையாததால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மறு நாளே ஜான்சனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், சாதாரண வார்டில் இருந்த போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜான்சனில் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, போரிஸ் ஜான்சன் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.